Purushothaman, Mahesh Babu2025-02-272025-02-272023-02-14KALANJIYAM – International Journal of Tamil Studies, ISSN: 2456-5148 (Print); 2456-5148 (Online), Kalanjiyam - International Journal of Tamil Studies களஞ்சியம் - சர்வதேச தமிழ் கல்வி ஆராய்ச்சி இதழ் Dept of Library and Information Science & Dept of Tamil, Nallamuthu Gounder Mahalingam College, 90, Palghat Road, Pollachi 642001, Tamilnadu, INDIA Publisher Website: https://www.ngmc.org/, 2(1), 1-18.2456-51482456-5148http://hdl.handle.net/10292/18780எந்த ஒரு மொழியும் அதன் தொன்மை வைத்தும், அதன் சொல், எழுத்து, மற்றும் ஒலிக்கும் முறைவைத்துப் போற்றப்படுகிறது . எந்த ஒரு மொழிக்கும் சொற்கள் இன்றி இன்றிமையாதது. சொற்கள் பேசுவதற்கு எளிதானதாகவும், புரிந்துகொள்வதற்கு ஏற்ப அமைய வேண்டும் . அந்த சொற்களை மனிதர்கள் பேச்சு வழக்கில் கொண்டு வரும்பொழுது, அந்த ஒலி, அந்த சொற்களின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்த வேண்டும் . அவ்வாறு வெளிப்படுத்தும் பொழுது அந்த சொற்களைப் பயன்படுத்திய உண்மைப் பொருள் கேட்போருக்குப் புலப்படும். அதேபோல், ஒருமொழி எழுத்து வடிவத்தில் இருக்கும் பொழுது, அந்த எழுத்துக்கள் எழுதுவதற்கு ஏதுவாகவும், அந்த எழுத்துக்கள் ஒரு சொல்லின் பகுதியைக் குறிப்பதாகவோ அல்லது முழு சொல்லையே குறிப்பதாகவோ அமைய வேண்டும் . பல மொழிகள் எழுத்து வடிவத்திலே தனி எழுத்துக்களைக் கொண்டு கோர்வையாக்கி, ஒரு வார்த்தையை, அதாவது சொல்லை அமைக்கின்றன. சில மொழிகள் ஒரு சொற்களையே எழுத்து வடிவத்தில் புலப்படுத்துகின்றன. பல மொழிகள் ஒலி வடிவம் பேச்சு வழக்கில் அல்லது எழுத்துக்களின் சேர்க்கையில் இருந்து வருகிறது. ஆனால், தமிழ் ஒலியை எப்படி ஒலிக்க வேண்டும் என்ற முறையைத் தெளிவாக எழுதி வைத்திருக்கிறது, அதாவது ஒரு எழுத்து உடலின் எந்த எந்த ஒலி உண்டாகும் பாகத்தைக் கொண்டு உச்சரிக்க வேண்டும் என்று தெளிவாகச் சொல்கிறது . மேலும் தமிழ் எழுத்துவடிவத்தை ஒலியுடன் ஓத்து அமைத்திருக்கிறது அல்லது ஒரு குறியீட்டை உணர்த்துகிறது. அதேபோல், தமிழ் ஒவ்வொரு எழுத்திற்கும் அருவப் பொருண்மை கொடுத்து, அந்த எழுத்துக்களின் கோர்வையை ஒரு சொல்லாக அதாவது வார்த்தையாக அமைத்துக் கொண்டது. இந்த சிறப்புத் தமிழின் தனித் தன்மை, தமிழ் அன்றி வேறு மொழி எதற்கும் இருப்பதாக அறியப்படவில்லை. இந்தக் கட்டுரை தமிழின் சொல், எழுத்து, மற்றும் ஒலியின் விஞ்ஞான பூர்வமான இணக்கத்தையும், தமிழ் பேசும்பொழுது உணர்ச்சிகளால் உண்டாகும் உடல் மாற்றத்தைத் தவிர்ப்பு பற்றியும், அதனால் மனிதருக்கு உண்டான பயன்களையும், முதல் முறையாக உலகுக்கு எடுத்துக்கூறும் ஒரு பதிவு.All articles published by KALANJIYAM are made immediately available worldwide under an open access license.. Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/.. It allows to use, reuse, distribute and reproduce the original work with proper citation.http://creativecommons.org/licenses/by/4.0/விஞ்ஞான அமுதம்மொழிதமிழ்தமிழ்: நஞ்சில்லா விஞ்ஞான அமுதம்Journal ArticleOpenAccess